மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லை – தயாசிறி ஜயசேகர..!

மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லை – தயாசிறி ஜயசேகர..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய கூட்டணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தான் அறிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட கூட்டணிகள் மீது எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லை.

கடந்த வாரம் நிமல் லான்சா நடத்திய கூட்டத்தைப் பார்த்தேன், அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதை நான் கவனித்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.