இலங்கையர்களுடன் செங்கடலில் பயணித்த கப்பல் தாக்கப்பட்டதா..? மரணித்தவர்கள் இலங்கையர்களா..?

இலங்கையர்களுடன் செங்கடலில் பயணித்த கப்பல் தாக்கப்பட்டதா..? மரணித்தவர்கள் இலங்கையர்களா..?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹௌத்தி தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை, இந்தியா உட்பட வெளிநாட்டு பணியாளர்களுடன் பயணித்த கப்பல் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

23 பணியாளர்களுடன் பயணித்த பார்படோஸ் கொடி பறக்கவிடப்பட்ட MV True Confidence என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதலால் கப்பல் தீப்பற்றியுள்ளது. குறைந்தது இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆறு பேர் வரை தீக்காயங்களுக்கு உள்ளாகினர் எனவும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 15 பேர், நான்கு வியட்நாமியர்கள், இரண்டு இலங்கையர்கள், ஒர் இந்தியர், மற்றும் நேபாளம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட்ட 23 பணியாளர்கள் அந்தக் கப்பலில் பயணித்துள்ளனர்.