இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு எதிர்வரும் டி20 உலக கிண்ணத்திற்கு முன்னதாக விண்ணப்பங்களை வரவேற்க இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதற்கு அந்த அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டும் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் அடுத்த மாதம் முடிவடைகிறது.

புதிய தலைமை பயிற்சியாளருக்கு 2027 கிரிக்கெட் உலகக் கிண்ணம் வரை மூன்று வருட ஒப்பந்தம் இருக்கும் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.