இலங்கை அணி மீது குற்றம் சுமத்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்..!

இலங்கை அணி மீது குற்றம் சுமத்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கட் அணியின் தோல்வி குிறத்து இந்திய வீரர் அம்பாட்டி ரய்டு கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த 3ம் திகதி நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணி, தென் ஆபிரிக்காவிடம் படு தோல்வியைத் தழுவியது.

உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான ஆடுகளங்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி 19.1 ஓவர்களில் 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

திருப்பு முனையாக அமைந்த நாணய சுழற்சி

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்ததன் மூலம் தென் ஆபிரிக்காவிற்கு வெற்றியை வழங்கியதாக ராய்டு குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தப் போட்டியின் திருப்பு முனையாக நாணய சுழற்சி அமையப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது தெரியாத போது முதலில் துடுப்பெடுத்தாடுவது மிகவும் ஆபத்தானது எனவும் இலங்கை அந்த விபரீத சோதனையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா அணியைப் போன்று இலங்கை அணியினால் விளையாட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.