3 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்..!

3 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 15 ரூபாவினாலும், சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் விலை 14 ரூபாவினாலும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 6 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய விலை 215 ரூபாவாகவும், சிவப்பு பருப்பின் புதிய விலை 282 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் புதிய விலை 269 ரூபாவாகும்.

இந்த புதிய விலைகள் இன்று (4) முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது.