
ஜனாதிபதி இன்று யாழ். விஜயம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் பல பொதுக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது அவதானம் செலுத்தவுள்ளார்.