தொடருந்தைப் பயணிகளுடன் நிறுத்திவிட்டுச் சென்ற சாரதி சேவையிலிருந்து இடைநிறுத்தம்!

தொடருந்தைப் பயணிகளுடன் நிறுத்திவிட்டுச் சென்ற சாரதி சேவையிலிருந்து இடைநிறுத்தம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பெலியத்த நோக்கிச் செல்ல வேண்டிய தொடருந்தை கொக்கல நிலையத்தில் நிறுத்திய சாரதி சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தொடருந்து பிரதிப் பொது முகாமையாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்தார். கொழும்பு கோட்டையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தொடருந்து ஒன்று கொக்கல தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்தே அதன் சாரதியின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாகத் தொடருந்து பிரதிப் பொது முகாமையாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் தொடருந்து திணைக்களம் மேற்கொண்டுள்ள விசாரணை நிறைவுபெற்றதும் சாரதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று காலை மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த இந்த தொடருந்து, கொக்கல ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. தொடருந்து சாரதி உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றதாகவும் தொடருந்து பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.