
இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் ஏழாவது வருடாந்த மாநாடு ஏப்ரல் மூன்றாம் திகதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் ஷெஹான் திசாநாயக்க அவர்களின் தலைமையில் கண்டியில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் சங்கத்தின் ஏழாவது வருடாந்த மாநாட்டை ஏப்ரல் மூன்றாம் திகதி கண்டி நகரில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஹுஸ்னி அஸீஸ், சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் சம்பத் குணசேகர மற்றும் ஏனைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னிலை வகிக்கும் ஆசிரியர் சங்கம் என்ற வகையிலும் அரசியல் கட்சி சார்பற்ற ஆசிரியர் சங்கம் என்ற வகையிலும் அனைத்து ஆசிரியர்களையும் தமது வருடாந்த மாநாட்டிற்கு அழைப்பதாக இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் உப தலைவர் ஹுஸ்னி அஸீஸ் தெரிவித்தார்.