கருணாசேனவுக்கு புதிய பிரதியமைச்சு பொறுப்பு

கருணாசேனவுக்கு புதிய பிரதியமைச்சு பொறுப்பு

கருணாசேன பரணவிதாரண இன்று  முதல் புதிய பிரதியமைச்சு பொறுப்புக்காக நியமிக்கப்படவுள்ளார்.

இதன்படி அவர் நாடாளுமன்ற மீளமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அவர் உள்ளூராட்சி பிரதியமைச்சராக பதவிவகித்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த பதவி யாருக்கு வழங்கப்படும் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.