ஆளும் கட்சிக்கு தாவவுள்ள மும்மூர்த்திகள்

ஆளும் கட்சிக்கு தாவவுள்ள மும்மூர்த்திகள்

முன்னாள் அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார ஆகியோர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
இன்னும், பவித்ரா அமைச்சராகவும், லக்ஷ்மன் மற்றும் மனுச ஆகியோர் பிரதி அமைச்சர்களாகவும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
பொது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பந்துல குணவர்தன மற்றும் டலஸ் அழப்பெரும ஆகியோருடனும் ஆளும் கட்சியின் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளுராட்சி மன்றங்கள், மாகாணசபைகள், அனர்த்த முகாமைத்துவம், சட்டம் ஒழுங்கு, தொடர்பாடல் போன்ற சில அமைச்சுக்களின் பிரதி அமைச்சர் பதவிக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.