தாஜூதீனின் சடலத்தின் கூறுகள் காணமல் போனமைக்கு தான் பொறுப்பல்ல – சமரசேகர

தாஜூதீனின் சடலத்தின் கூறுகள் காணமல் போனமைக்கு தான் பொறுப்பல்ல – சமரசேகர

முன்னாள் றக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் சடலத்தில் கூறுகள் காணாமல் போனமைக்கு தாம் காரணம் அல்ல என்று கொழும்பின் முன்னாள் சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் சட்டவைத்திய அதிகாரி இதனை கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் வெளியிட்டார்.

2012ஆம் ஆண்டு மே மாதம் தாஜூதீனின் தொடை எலும்பு உட்பட்ட உடல்கூறுகள் கடும் குளிர்மையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில் தாம் 2013ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதியன்று ஓய்வுப்பெற்ற பின்னர் நீதிமன்ற கட்டளையின்பேரில் 2015ஆம் ஆண்டு குறித்த குளிர்மை பெட்டியில் பார்த்தபோது குறித்த உடல்கூறுகள் இருக்கவில்லை.

குறித்த உடல்கூறுகள் வைக்கப்பட்டிருந்த இடம் வேறு இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டமையால் தாஜூதீனின் உடல்கூறுகளும் உள்ளக அடிப்படையில் இடமாற்றி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

எனினும் இதற்கு தாம் எவ்விதத்திலும் பொறுப்பில்லை என்று முன்னாள் சட்டவைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.