சங்கக்கார ’டக்-அவுட்’ -ஹோபர்ட் அணியை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்

சங்கக்கார ’டக்-அவுட்’ -ஹோபர்ட் அணியை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்

அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 95 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

பிக் பாஷ் லீக் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை குவித்தது.

விக்கெட் கீப்பர் பிராட் ஹாட்டின் 72 ஓட்டங்களும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), சில்க் 41 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஹோபர்ட் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

சங்கக்கார தான் சந்தித்த முதல் பந்திலே ஆட்டமிழந்து டக்-அவுட்டாக வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

2 துடுப்பாட்ட வீரர்கள் டக்- அவுட்டாகவும், 8 பேர் ஒற்றை ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் ஹோபர்ட் அணி 15.5 ஓவர்களிலே 91 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கடைசி வரை போராடிய ஜார்ஜ் பெய்லி 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பந்து வீச்சில் அசத்திய நாதன் லயன் 23 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். பிராட் ஹாட்டின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.