அமைச்சர் ரிஷாதுக்கு 100 கோடி வழங்கத் தான் தயார் – ஆனந்த சாகர தேரர்

அமைச்சர் ரிஷாதுக்கு 100 கோடி வழங்கத் தான் தயார் – ஆனந்த சாகர தேரர்

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு பல நிபந்தனைகளின் அடிப்படையில் 100 கோடி ரூபாய் வழங்க தான் தயார் என தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவுசெய்ய இன்று(23) கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளித்திருந்த போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை விகார மகாதேவி பூங்கா அருகில் அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி தனக்கெதிராக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்து தனது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக கூறி ஆனந்த சாகர தேரருக்கெதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன் முறைப்பாடு செய்திருத்தார்.

தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த சாகர பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)