முதலைக் கண்ணீர் வடித்தாரா ஒபாமா

முதலைக் கண்ணீர் வடித்தாரா ஒபாமா

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய அதிபர் பாரக் ஒபாமா, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது என்றும், 2012ம் ஆண்டில் சாண்டி ஹூக் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலியான சம்பவம், தன் நெஞ்சை மிகவும் உலுக்கியது என்று கூறிய ஒபாமா, சிறிது நேரத்திலேயே தாரை தாரையாக கண்ணீர் சிந்தினார்.

ஒபாமாவின் இந்த அழுகை,. அமெரிக்கா மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளின் பத்திரிகைகளிலும் முக்கிய செய்தியாக வெளியானது.

இதனிடையே, அந்த கருத்தரங்கில், ஒபாமா உண்மையாக அழவில்லை என்றும், கண்ணில் வெங்காயத்தை தேய்த்துக்கொண்டே, செயற்கையாக கண்ணீரை வரவழைத்திருக்கிறார் என்றும் பாக்ஸ் நியூஸ் (Fox News) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.