பௌத்த பிக்குகளுக்கான சட்டம் நகைப்பிற்குரியது – குணவன்ச தேரர்

பௌத்த பிக்குகளுக்கான சட்டம் நகைப்பிற்குரியது – குணவன்ச தேரர்

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாது பௌத்த பிக்குகளுக்காக சட்டம் போடுவது நகைப்பிற்குரியது என கொழும்பு 7, தர்ம நிறுவனத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டங்களை உரிய முறையில் நிறுவாது, பௌத்த பிக்குகளை வழிநடத்த சட்டம் இயற்றுவது நகைப்பிற்குரியதாகும்.

அரசாங்கம் எவ்வாறான சட்டங்களை கொண்டு வந்தாலும், மூன்று பீடங்களினதும் தலைவர்களினதும் சங்க சபையினதும் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தரப்பினரும் சட்டத்தை மீறிச் செயற்படுகின்ற நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

மஹா சங்கத்தினருக்கு துன்புறுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் இந்த சட்டம் அமுல்படுத்தப்படலாம்.

போலி நோக்கங்களின் அடிப்படையில் செயற்படும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தபடுவதற்கு நான் ஒருபோதும் தடை போடவில்லை.

எனினும், கஷ்டப்பிரதேச கிராமங்களில் மக்களுக்காக ஜோதிடக் கணிப்புக்களை மேற்கொள்ளும் பௌத்த பிக்குகளுக்கு அதற்கான சந்தர்ப்பம் இருக்க வேண்டுமென எல்லே குணவன்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகள் ஜோதிடம் பார்க்க தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.