ஜே.வி.பி பந்து வீச , நல்லாட்சி ஓங்கி 6 அடிக்கின்றது – மஹிந்த

ஜே.வி.பி பந்து வீச , நல்லாட்சி ஓங்கி 6 அடிக்கின்றது – மஹிந்த

மின்சாரக் கதிரையில் ஒரே நாளில் சாவு ஆனால் மைத்திரி என்னை அணுஅணுவாகவே சாகடிக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .

அளுத்கம பிரதேசத்திலுள்ள கடற்கரைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை உடற்பயிற்சியில் ஈடுபட மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளார்.

இதனை அறிந்த ஊடகவியலாளர்கள் அங்கு சென்று அவருடன் கலந்துரையாடிய போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ததில்லை. எனக்கு வாக்களித்த 58 லட்சம் வாக்காளர்களுக்கும் துரோகம் செய்ததில்லை.

மறுபுறம் எனக்கு வாக்களிக்காத 48 லட்சம் பேருக்கும் நான் துரோகம் இழைக்கவில்லை. ஆனால் மக்களுக்கும், கட்சிக்கும் துரோகம் இழைத்து விட்டதாகவே என்மீது குற்றம் சுமத்துகின்றனர்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளித்திருக்கிறார்கள்.

ஜே.வி.பி பந்தை அழகாக வீசுகின்றது, அரசாங்கம் அதனை உயர்த்தி 6 ஓட்டங்கள் பெறும் வகையில் அடிக்கின்றது.

சங்காவை விடவும் அரசாங்கம் சிறப்பாக விளையாடுகிறது என்றார்.