தமிழ் மாணவரை டிக்கட் புத்தகத்தால் தாக்கும் நடத்துனர்

தமிழ் மாணவரை டிக்கட் புத்தகத்தால் தாக்கும் நடத்துனர்

வேவல்­வத்தை தோட்­டத்­தி­லி­ருந்து பலாங்­கொடை நக­ருக்கு சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ்ஸில் செல்லும் தமிழ் பாட­சாலை மாண­வர்கள் குறித்த பஸ்ஸின் நடத்­து­னரால் தகாத முறையில் நடத்­தப்­பட்டும், டிக்கட் புத்­த­கத்தால் தலையில் தாக்கும் நிலை­மை­களும் நீடித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இரட்டைக் கதவு பஸ்ஸை தவிர்த்து தற்­போது ஒற்றைக் கத­வு­டைய பஸ்­ஸி­னையே சேவையில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ளனர். இதனால் நாள் ஒன்­றிற்கு 30 முதல் 40 பேர் வரை­யான மாணவ மாண­வியர் பாட­சா­லைக்கு செல்ல முடி­யாத அவல நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பெற்­றோரும் மாண­வர்­களும் கவ­லையும் விச­னமும் தெரி­வித்­துள்­ளனர்.
இது இவ்­வா­றி­ருக்க ஆச­னங்­களில் அமர்ந்­தி­ருக்கும் தமிழ் மாணவ மாண­வி­யரை எழச் செய்து அவ்­வா­ச­னங்­களில் சிங்­கள மாண­வர்களை அமரச் செய்யும் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­படி பஸ்ஸின் நடத்­து­னர்கள் மேற்­கொண்டு வரு­வ­தாக சம்­பந்­தப்­பட்ட மாண­வர்கள் பாட­சாலை அதி­பர்­க­ளிடம் புகார் செய்­துள்­ளனர். மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்ற புகாரின் அடிப்­ப­டையில் சம்­பந்­தப்­பட்ட இ.போ.ச சாலை முகா­மை­யா­ளரின் கவ­னத்­திற்கும் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது.
இவ்­வா­றான நிலை­யி­லேயே சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இரட்டைக் கதவு பஸ் தற்­போது ஒற்­றைக்­க­தவு பஸ்­ஸாக மாறி­யுள்­ளது.
இதனால் நாள் ஒன்­றிற்கு 30 முதல் 40 பேர் வரை­யான மாணவ மாண­வியர் பாட­சா­லைக்கு செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. அதி­காலை 5.45 மணிக்கு சேவையில் ஈடு­ப­டுத்­த­ப்ப­டு­கின்ற பஸ்ஸில் பாட­சாலை மாண­வர்கள் மட்­டு­மன்றி ஏனைய பய­ணி கள் பய­ணிக்­கின்­றனர்.
பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு ஏற்­பட்ட அசௌ­க­ரிய நிலை­மை­களை புகார் செய்­த­தை­ய­டுத்து, பழி­வாங்கும் நோக்­கி­லேயே இவ்­வாறு பஸ் சேவையை வீழ்ச்சியடைய செய்திருப்பதாகவும் பொதுமக்கள் விச னம் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்