அப்பாவோடு நடிப்பதை கௌவுரவமாக கருதுகிறேன்

அப்பாவோடு நடிப்பதை கௌவுரவமாக கருதுகிறேன்

தந்தையை போலவே நடிப்பு திறமையை வெளிப்பத்தி தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் தனி இடம் பிடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன்.

இருப்பினும் தந்தையும் மகளும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை. புதிய படத்தில் கமலுடன் அவரது மகளாகவே ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இது குறித்து அவரிடம் கேட்ட போது,

”நான் சினிமாவில் பல படங்கள் நடித்து விட்டடேன் இருப்பினும் எனது அப்பாவோடு நான் மகளாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனது அப்பாவோடு நடிப்பதை நான் எனக்கு கிடைத்த பெரிய கௌவுரவமாக கருதுகிறேன். அத்தோடு, அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

அப்பாவுடன் இணைந்து நடிப்பது சவாலான விஷயம். இந்த படத்தில் சிறப்பாக நடிக்க கடினமாக உழைப்பேன். அதுதான் என்னுடைய வேலை மற்ற விஷயங்கள் கடவுள் கையில் தான் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.