துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான தெமட்டகொட சமிந்தவை சந்தித்து ஞானசார தேரர் நலம் விசாரிப்பு

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான தெமட்டகொட சமிந்தவை சந்தித்து ஞானசார தேரர் நலம் விசாரிப்பு

நீதிமன்றிலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும்போது தெமடகொட பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தெமடகொட சமிந்தவின் நலம் விசாரிக்க தேரர்கள் சிலருடன் நேற்று ,மதியவேளை வைத்தியசாலைக்குச் சென்ற ஞானசார தேரர் சமிந்தவின் கைக்கு பிரித் நூல் கட்டியதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடிவயிறு மற்றும் நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சத்திரசிகிச்சை அளிக்கப்பட்ட தெமடகொட சமிந்த தற்போது சிறைச்சாலை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் அதி உச்ச பாதுகாப்பில் வைத்தியசாலையின் விபத்துக்கான சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ஞானசார தேரர் சமிந்தவின் கையில் நூலினை கட்ட முனைந்த போது சிறைச்சாலை அதிகாரிகளால் அதற்கு எதிர்ப்பினை வெளியிட,அங்குளிமாலாவுக்கும், கோசொல் மன்னனுக்கும் பெளத்த மதத்தில் கருணையில் வேற்றுமைகள் இல்லையென தெரிவித்துள்ளார்.