சிறைச்சாலை பஸ்களுக்கு கறுப்புக்கண்ணாடி

சிறைச்சாலை பஸ்களுக்கு கறுப்புக்கண்ணாடி

சிறைச்சாலை பஸ்கள் அனைத்துக்கும் கறுப்புக்கண்ணாடி பொறுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பஸ்கள், முக்கியமான சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், தெமட்டகொட பகுதியில் வைத்து சிறைச்சாலை பஸ்ஸொன்றின் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதனாலேயே இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.