துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிகவுக்கு எச்சரிக்கையுடன் பிணை

துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிகவுக்கு எச்சரிக்கையுடன் பிணை

துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, நீதிமன்றத்துக்கு வந்திருந்த தம்மிக்கவால், ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வாழைத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில், துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜரான அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து, கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளதுடன் நீதவானால் இவருக்கு கடுமையாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.