ஆங் சான் சூசிக்கு அமைச்சுப்பதவி

ஆங் சான் சூசிக்கு அமைச்சுப்பதவி

மியன்மாரில் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் தலைவி ஆங் சான் சூசிக்கு அந்நாட்டின் பிரதமருக்கு சமமான அதிகாரங்களை கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனால் அவருக்கு அந்நாட்டின் தேசிய ஆலோசகர் பதவி கிடைத்துள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டு ஆட்சியில் இருந்த மியன்மாரில் புதிய ஜனாதிபதியாக ஹிடின் கியாவு நேற்று(30) பதவி ஏற்று கொண்டார்.

ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் தலைவி ஆங் சான் சூசி தற்போதைய அரசியல் சட்டப்படி அதிபராக பதவியேற்க முடியாது.

அதேசமயம் அவர் அமைச்சரவையில் ஒரு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.