முதலமைச்சரை கைது செய்ய சிங்கள ராவய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை

முதலமைச்சரை கைது செய்ய சிங்கள ராவய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனை உடனடியாக கைதுசெய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனியரசை உருவாக்க வேண்டும் எனக் கூறி, முதலமைச்சர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் புதிய பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.