கொஸ்லந்த – மீரியபெத்த மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா நல்லாட்சி..

கொஸ்லந்த – மீரியபெத்த மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா நல்லாட்சி..

தமக்கு வாழ பிறிதொரு இடத்தை பெற்றுத் தர வேண்டும் என, கொஸ்லந்த – மீரியபெத்த அபாய வலயப் பகுதியிலுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தை – மீரியபெத்த பகுதியில் 2014ம் ஆண்டு ஒக்டோபர் 29ம் திகதி இடம்பெற்ற மண்சரிவின் பின்னர் அந்தப் பகுதியை சூழவுள்ள இடங்கள் அபாயப் பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டன.

இன்னும்,  இந்தப் பகுதிகளில் பகுதியில் சுமார் 90 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருவதுடன், குறித்த பகுதிகளுக்கு மின் இணைப்புக்களை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதோடு, ஊருக்கு செல்லும் பாதைகளும் சேதமடைந்துள்ளதாகவும் மக்கள் மேலும், குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் போதுமான வசதிகள் இல்லை என்பதோடு, மண்சரிவின் பின்னர் அப் பகுதியில் இருந்த பாடசாலையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், மூன்று கிலோமீற்றர் வரையான தூரத்திலுள்ள பாடசாலைகளுக்கே தமது பிள்ளைகளை அனுப்ப வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தமது கோரிக்கையில் முன்வைத்துள்ளனர்.