முகப்பருக்களை  நீக்க எளிய டிப்ஸ்

முகப்பருக்களை நீக்க எளிய டிப்ஸ்

முகப்பரு, ஒவ்வொருவரின் அழகையும் கெடுக்கும் ஒன்று.

அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினரை அதிக அளவில் தாக்கும் ஒன்று.

தடுக்க இதோ வழிகள்..

# தேன் மற்றும் ஆப்பிள்

1 ஆப்பிளை துருவி, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, பருக்கள் மறைய ஆரம்பிக்கும்.

# முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை

முட்டையின் வெள்ளைக்கருவில் பாதி எலுமிச்சையை பிழிந்து கலந்து, வெயிலில் நின்று முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் பருக்கள் மறையும்.

# தயிர் மற்றும் எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சையை ஒன்றாக கலந்து மாஸ்க் போட்டால், நிச்சயம் பருக்கள் நீங்கும். அதிலும் 2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.