வாகனங்களின் வரி அதிகரிப்பும் அரசுக்கு ஏற்படும் நட்டமும் குறித்த உண்மையினை ஜோன் போட்டுடைத்தார்

வாகனங்களின் வரி அதிகரிப்பும் அரசுக்கு ஏற்படும் நட்டமும் குறித்த உண்மையினை ஜோன் போட்டுடைத்தார்

தகுதியற்றவர்கள் கார் போன்ற வாகனங்களை பயன்படுத்துவதாலேயே வாகனங்களின் விலைஅதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கார்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இலங்கையில்அதிகரித்துள்ளதும் இதற்கான மற்றுமொரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, வரியினை அதிகரிப்பதால் அரசுக்கு நட்டமே ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று கலேவலை-வஹகோட்டை தேவாலயாத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், முச்சக்கரவண்டிகளின் பாவனையும் இலங்கையில் அதிகரித்துள்ளதாக முச்சக்கரவண்டிகளின் சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே முச்சக்கர வண்டிகளின் விலையும் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.