முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவைக் கைதுசெய்யுமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் கனிஷ்க விஜேரத்னவே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு, மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இந்தச் சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டை, குற்றப்புலனாய்வு பிரிவினர், மோசன் ஊடாக மீண்டும் அழைக்கப்பட்டு, தாக்கல் செய்த மேலதிக அறிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திலின கமகேவை, சட்டமா அதிபரின் ஆலோசனை, அத்தோடு, விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம், கைதுசெய்யவேண்டும் என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்தே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரினால் தாக்கல் செய்யப்பட்ட முற்கூட்டிய பிணை விண்ணப்பமும், நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில், இன்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.