ஹைலெவல் வீதிக்கு பதிலாக மாற்று வீதிகள் அறிவிப்பு…

ஹைலெவல் வீதிக்கு பதிலாக மாற்று வீதிகள் அறிவிப்பு…

கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ காரணமாக ஹைலெவல் வீதி இன்னும் மூடப்பட்டுள்ளமையால் பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய மாற்று பாதைகளை காவற்துறை அறிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து பயணிக்கும் வாகனங்கள், ஹங்வெல்லை – பூகொட – கனன்பெல்ல ஊடாக அவிசாவளையை அணுக முடியும்.

அவசாவளையில் இருந்து வரும் வாகனங்கள் தல்துவ – ஊரபொல ஊடாக கொழும்பை அணுக முடியும் என காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்பட்டுள்ள இந்நிலைமை காரணமாக விஷேட புகையிரதம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த புகையிரதம் பாதுக்கையில் இருந்து அவிசாவளை வரை பயணிக்கும் என குறித்த  திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.