கருப்புப் பண விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவத் தயார் – சுவிட்சர்லாந்து அதிபர்

கருப்புப் பண விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவத் தயார் – சுவிட்சர்லாந்து அதிபர்

கருப்பு பண விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவி செய்வோம் என்று பிரதமர் மோடியிடம் சுவிட்சர்லாந்து அதிபர் உறுதி அளித்துள்ளார்.

கருப்பு பண விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவி செய்வோம் என்று பிரதமர் மோடியிடம் சுவிட்சர்லாந்து அதிபர் உறுதி அளித்தார்.

நேற்று ஜெனீவா நகரில் சுவிட்சர்லாந்து அதிபர் ஜோகன்சினைடர் அம்மானை மோடி சந்தித்தபோது, இந்தியாவின் சார்பில் 2 முக்கிய விஷயங்களில் சுவிட்சர்லாந்தின் உதவியை கோரினார்.

குறிப்பாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம், அணுசக்தி நாடுகள் வரிசையில் இணைவதற்கு ஆதரவு அளிக்கவேண்டியதன் அவசியம் குறித்து மோடி வற்புறுத்தினார். அப்போது சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவகாரத்தில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதை பலப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இதுதவிர வர்த்தகம், முதலீடு, தொழிற்பயிற்சி ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே உறவை மேலும் விரிவுபடுத்திக் கொள்வது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.