2016ஆம் ஆண்டு நிறைவடையும் போது அரசாங்கத்தின் கடன் சுமையின் பில்லியன் அளவு இவ்வளவுதான்..

2016ஆம் ஆண்டு நிறைவடையும் போது அரசாங்கத்தின் கடன் சுமையின் பில்லியன் அளவு இவ்வளவுதான்..

2016ஆம் ஆண்டு நிறைவடையும் போது அரசாங்கத்தின் கடன் சுமை 10 ஆயிரம் பில்லியன் ஆக அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரண எதிர்வு கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்நாட்டை கடன் சுமைக்கு கொண்டு சென்றது மஹிந்த ராஜபக்ஷவின்அரசாங்கமா அல்லது தற்போதைய அரசாங்கமா என்பதை 2015ஆம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கை தெளிவாக தெளிவூட்டுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கையின் பிரகாரம், தமது அரசாங்கம் ஆட்சி செய்த 2014ஆம் ஆண்டில் 7390 பில்லியன் கடன் தொகை காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.