குத்துச்சண்டை ஜாம்பவான் அலியின் மூளை ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டதா..?

குத்துச்சண்டை ஜாம்பவான் அலியின் மூளை ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டதா..?

குத்துச்சண்டை ஜாம்பவானின் மூளையை ஆராய்ச்சிக்கு தானமாக அளிக்க முகமது அலி மற்றும் அவரது குடும்பமும் ஒருபோதும் முன்வரவில்லை என அவருக்கு தீவிர சிகிச்சைஅளித்த டாக்டர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1984ம் ஆண்டு முதல் முகமது அலிக்கு சிகிச்சை அளித்து வரும் Dr. Abe Lieberman’sயிடம் முகமது அலியின் மூளை தானத்தை குறித்து கேட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குத்துச்சண்டை காரணமாக அலிக்கு குறித்த பார்கின்சன் நோய் ஏற்படவில்லை எனவும், எனினும் நூறு சதவிகிதம் அதை உறுதியாக செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் கூறுகையில், அலி முன்பே குறித்த நோயால் பாதிக்கப்பட்டதாகவும், கடந்த 1980ம் ஆண்டு லாரி ஹோல்ம்ஸ் எதிராக நடந்த சண்டையில் தனக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அலியே கருதியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனது நோய்க்கு காரணம் குத்துச்சண்டை என ஒருபோதும் அலி கருதியதே இல்லை எனவும், குத்துச்சண்டை வாழ்க்கையை குறித்து அவர் வருந்தியதே இல்லை எனவும் கூறியுள்ளார்.

கடவுள் நம்பிக்கையுடைய அலி, தான் பார்கின்சன் நோயை அனுபவித்து, இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைய தான் உதவ வேண்டும் என்பதே கடவுளின் சித்தம் என அலி நம்பியதாக டாக்டர் கூறியுள்ளார்.