(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 240 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கொக்கெய்ன் போதைப்பொருளுடன் போலந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோவுக்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப் பொருளை இலங்கை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொலம்பியாவில் இருந்து கட்டார் ஊடாக அவர் நாட்டிற்கு வந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.