கிரிஸ் கெய்லின் டிரிங்கிங் பார்ட்னரான  குரங்குடன் ஆட்டம்..

கிரிஸ் கெய்லின் டிரிங்கிங் பார்ட்னரான குரங்குடன் ஆட்டம்..

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் உலகமெங்கும் நடக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய கெய்ல், தற்போது கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் ஜமைக்கா அணியின் தலைவராக இருக்கும் கெய்ல், டிரின்பகோ அணிக்கு எதிராக 108 ஓட்டங்கள் (6 பவுண்டரி, 11 சிக்சர்) எடுத்து அசத்தினார். இது இவரது 18வது டி20 சதமாகும். அதே சமயம் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் 3வது சதமாகும்.

இந்நிலையில் கெய்ல் இன்ஸ்டாகிராமில் குரங்குடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “என்னுடைய டிரிங்கிங் பார்ட்னர் சார்லி” என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள கெய்ல், சார்லியை பற்றி கிண்டலடித்தவர்களை பிளாக் செய்து விட்டதாகவும் ஜாலியாக கூறியுள்ளார்.

13651894_308634642858551_138966988_n(1)

[youtube url=”https://www.youtube.com/watch?v=HXL42H11UGc” width=”560″ height=”315″]