வேகப்பந்து வீச்சாளர் மாலிங்கவுக்கு இந்திய சினிமாவில் வாய்ப்பு

வேகப்பந்து வீச்சாளர் மாலிங்கவுக்கு இந்திய சினிமாவில் வாய்ப்பு

நான் அறிந்திருக்கும் வகையில் வீரர் ஒருவரின் சரிதையானது பிரபல்யம் பெறுவது அவரது விளையாட்டிலுள்ள திறமையினை வைத்தேயாகும். ஆனால் சில வீரர்கள் ஓய்விலும் பிரபலம் பெறுகிறார்கள்..

அவ்வாறு அவர்கள் செய்யும் செயல்கள் குறித்து அவதானமாக இருப்பதனையே கருத்தில் கொண்டு சில வீரர்கள் தங்களை பிரபலப்படுத்த முனைகின்றனர். 

கிட்டடியில் இவ்வாறே இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ரஞ்சித் ராமநாயக்கவினை சந்திக்கச் சென்றிருந்தார்..

அது பற்றி அவருடனான சாம்பாசனை வாசகர் கவனத்திற்கு..

வாழ்க்கை எப்படி?

சந்தோசமாய் களிகின்றனது..

*  இந்நாட்களில் என்ன செய்கின்றீர்கள்?

எனது காலில் ஏற்பட்ட உபாதைக்கு பரிகாரமாக முழு நேரத்தினையும் அதற்கான பயிற்சியிலேயே செலவிடுகின்றேன்.

* இதுவரையில் பெறப்பட்ட சிகிச்சையில் ஏதும் மாற்றங்கள் தெரிகின்றதா?

இப்போதைக்கு அவ்வாறு எந்த நல்ல பலனுமில்லை. குறைந்தது 06 மாதமாவது செல்லும் என வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

* உங்களது கிரிக்கெட் வாழ்வுக்கு என்ன நடக்கின்றது?

என்ன செய்ய.. இந்த உபாதையினை சுகப்படுத்த வேண்டும். பின்னர் மீண்டும் பயிற்சியில் இறங்கி எனது திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்.

* ஓவர் 20 – 50 போன்றவற்றில் மட்டும் நீங்கள் விளையாட தீர்மானித்தது குறித்து இப்போது கவலையா..

இல்லை.. நான் நாட்டிற்காகவே விளையாடியவன்.. அதுபற்றி எந்த கவலையும் இல்லை..

* கடந்த போட்டிகளை பார்வையிட்டீர்களா?

ஆம். என்னால் இயன்றளவு நேரம் ஒதிக்கி போட்டியினை பார்வையிடுகின்றேன்..

* அணி குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

அணி நல்ல நிலைமையில் தான் இருக்கின்றது.. அவர்களுக்கு பயிற்சியே போதவில்லை.. பயிற்சி பெற்றிருந்தால் நல்ல நிலைமைக்கு அணியினை கொண்டு வரலாம்.

* போட்டிகளிலிருந்து விலகியிருகின்றமை குறித்து உங்கள் மனைவி பிள்ளைகள் என்ன கூறுகின்றார்கள்..

அவர்களுக்கு நான் வீட்டிலிருப்பது அலாதிப்பிரியம்..

* இவ்வாரிருக்கையில், நீங்ககள் ரஞ்சன் ராமநயாக்கவை சந்தித்ததாக கதை பரவுகின்றதே..?.

ரஞ்சன் என்பவர் எனக்கு மிகவும் விருப்பமான அரசியல்வாதி என்பதால் அவரை சந்திக்கச் சென்றேன். அதுவொரு எதேச்சையான சந்திப்பு எனலாம்..

* குறித்த சந்திப்பினை தொடர்ந்து நீங்கள் சின்னத்திரைக்கு நடிக்கவுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் கதை பரவுகிறதே..? 

அவ்வாறான நோக்கம் எதுவுமில்லை.. நான் இந்நாட்டின் வீரரொருவர் மட்டுமே. அதற்கு என்னால் முயன்றளவு ஒத்துழைப்பேன்.

* இதற்கிடையில், விளையாட்டுக்கு ஓய்வு வழங்கி அரசியலில் இணையப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றதே..?

ஆஹ், இது புதினமாய் இருக்கின்றதே.. என்னை விட என்னைப் பற்றி தேடுவதற்கென்றே ஒரு குழு இருக்கிறார்கள் போல.. எனக்கு அரசியல் என்றால் அலாதிப்பிரியம்.

ஆனால், எனக்கு அரசியல் குறித்த எந்த அறிவும் இல்லை. அப்படியிருக்க நான் எவ்வாறு அரசியலில் குதிப்பேன்.. ஆனால் வருங்காலம் குறித்து கணிக்க முடியாது.

* அரசியலில் அல்லது சின்னத்திரையில் உங்களுக்கு வாய்ப்புக்கள் கிட்டியுள்ளதா? 

சின்னத்திரைக்கு ஏராளமான வாய்ப்புக்கள் கிட்டியுள்ளது. இன்னும், இந்திய சினிமாவிலும் வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆனால் அரசியலுக்கு எந்த வாய்ப்பும் இதுவரையிலும் கிட்டவில்லை.

* வாய்ப்புக் கிட்டினால்..?

 

வாய்ப்புக் கிட்டினால் அதுபற்றி யோசிக்கலாம்..

* முன்னால் எவ்வளவு காலம் கிரிக்கெட்டில் இருப்பீர்கள்?

2018 T 20 உலகக்கிண்ண போட்டியிலும், 2019, 50 ஓவர் உலகக்கிண்ண போட்டியிலும் பங்குபெற எண்ணியுள்ளேன்.

* உங்களை வைத்து செய்திகள் வரையப்படுகின்றன.. இது குறித்து என்ன நினைக்கிறீர்? 

நான் எதுவுமே நினைக்கவில்லை.. என்னை வைத்து தான் செய்திகள் வரையப்படுகின்றதென்றால் அதில் அவர்களுக்கு ஏதும் ஊதியம் வருகின்றதாய்க்கும்.. அதற்காக வேண்டி நான் யாரினதும் வயிற்றிலடிக்க விரும்பவில்லை.. அதுகுறித்து நான் சந்தோசமடைகிறேன்.