வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஜெரோம் டெய்லர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஜெரோம் டெய்லர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜெரோம் டெய்லர். இந்திய டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டெய்லர் அறிவித்துள்ளார். 32 வயதான அவர் 46 டெஸ்டில் விளையாடி 130 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 13 ஆண்டு காலம் டெஸ்டில் அவர் ஆடியுள்ளார்.

டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து கேமர் ரோச், ஜெரோம் டெய்லர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 21ம் திகதி ஆண்டிகுவாவில் தொடங்குகிறது.  இந்த தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ளது.

டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுடன் மோதிய 2 நாள் பயிற்சி ஆட்டம் ‘டிரா’ ஆனது. 3 நாட்கள் நடைபெறும் 2-வது பயிற்சி ஆட்டம் 14ம் திகதி  தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஹோல்டர் கெப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விக்கெட் கீப்பரும், முன்னாள் கெப்டனுமான டேனிஷ் ராம்தின் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து இருந்தார். இதனால் அவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இதேபோல வேகப்பந்து வீரர்கள் கேமர் ரோச், ஜெரோம் டெய்லர் ஆகியோரும் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மேலும் மிகுல்கும்மின்ஸ், ஹோப், ஜோமல் வாரிகன் ஆகியோரும் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளனர்.

புதுமுக வீரர் ரோஸ்டன் சேஸ் அணிக்கு தேர்வாகி உள்ளார். இதேபோல லியான் ஜான்சனும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 12 பேர் கொண்ட வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் விவரம்:-

ஜேசன் ஹோல்டர் (கெப்டன்), கிரேக் பிராத் வெயிட் (துணை கெப்டன்), சாமுவேல்ஸ், ரோஸ்டன் சேஸ், டாரன் பிராவோ, லியான் ஜான்சன், பிளாக் வுட், கார்லோஸ் பிராத் வெயிட், ராஜேந்திர சந்திரிகா, ஷான் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), கேப்ரியல், தேவேந்திர பிஷூ.