தனது முதல் போட்டியிலேயே சாதனை படைத்த லக்ஷான்

தனது முதல் போட்டியிலேயே சாதனை படைத்த லக்ஷான்

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேரம் நிறைவடையும் போது, இலங்கைஅணி தமது இரண்டாம் இன்னிங்ஸில், 1 விக்கட்டை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முன்னதாக முதலாம் இன்னிங்ஸில் இலங்கை அணி 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

அதேநேரம் அவுஸ்திரேலியா தமது முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இதன்போது தனது முதலாவது போட்டியில் இடது கை பந்து வீச்சாளர் ஒருவர் பெற்று கொண்ட சாதனையை முறியடித்துள்ளார் லக்ஷான் சந்தகென்.

இதற்கு முன்னர் 1935 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் இடது கை பந்து வீச்சாளர் லெஸ்லி ஸ்மித், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 64 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கட்டுகளை வீழ்த்தியமையே சாதனையாக இருந்தது.

எனினும் லக்ஷான், 58 ஒட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையை முறியடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=41GZ2NI6Ga8″ width=”560″ height=”315″]