மெல்லோட்டமெனும்  jogging…

மெல்லோட்டமெனும் jogging…

மெல்லோட்டமென்பது விரைவாக நடப்பதற்கும் வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும்.

இதனை jogging என்று சொல்வார்கள்.உடலுக்கேற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சி மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கின்றது.

பெரும்பான்மையான மருத்துவர்கள் கூடத்  தங்களை மாரடைப்பிலிருந்து காத்துக்கொள்வதற்காகத் தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கின்றார்களெனக் கூறப்படுகின்றது.

இனி மெல்லோட்டத்தின் பயன்களை பார்ப்போமேயானால்;

1.நமது இருதயம் சுருங்கும் போது உடலின் பல பகுதிகளுக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு சாதாரண நிலையை விட மெல்லோட்டத்தின் போது அதிகமாகின்றது.
2.இரத்தக் குழாய்களையும் ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புக்களையும் வலுவடையச்செய்கின்றது.
3. இரத்தக் குழாய்களின் உட்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கின்றது.
4. கூடிய இரத்த அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகின்றது.
5. இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவு அதிகமாவதால் தமனிகளில் இரத்தம் உறைவதைத் தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கின்றது.
6. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரோலையும், டிரை கிளிசறைடையும் குறைக்க உதவுவதால் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகின்றது.