பாரத கொல்லப்படாமல் இருந்திருந்தால்  நாமல்-ஹிருணிகா திருமணம் நடந்திருக்கும்

பாரத கொல்லப்படாமல் இருந்திருந்தால் நாமல்-ஹிருணிகா திருமணம் நடந்திருக்கும்

துமிந்த சில்வாவால் சுட்டுக் கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மன் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்-அக்கட்சியின் தொழில் சங்க ஆலோசகர் என்பதற்கு மேலாக மஹிந்தவின் நெருங்கிய நண்பனாகத் திகழ்ந்தார்.அவர்கள் இருவரின் நட்பு நீடித்து நிற்க வேண்டும் என்பதற்காக இருவரும் சம்பந்திகளாவதற்கு முடிவெடுத்தனர்.

அரசியல் பற்றி எதுவும் தெரியாது மொடலிங் துறையில் ஈடுப்பட்டு வந்த பாரதவின் மகள் ஹிருனிக்காவுக்கும் மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஸவுக்கும் திருமணம் முடித்து வைக்க இருவரும் முடிவெடுத்தனர்.

ஆனால்,பரதவின் கொலை எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது.தனது நண்பனின் குடும்பத்துக்கு ஏதாவது நட்டஈடு வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து மஹிந்த ஹிருனிகாவை மாகாண சபை உறுப்பினராக ஆக்கியபோதும் துமிந்த சில்வாவை மஹிந்த குடும்பம் காப்பாற்றி வந்ததால் ஹிருணிகா மஹிந்த குடும்பம் மீது கடுப்பாகாகவே இருந்தார்.

தனது தந்தையைக் கொன்ற துமிந்தவைப் பாலிவாங்குவதற்கான ஒரு கருவியாகவே அரசியல் அதிகாரத்தை ஹிருணிகா கையில் எடுத்தார்.

தாமரை இலைமீது தண்ணீர்போல் மஹிந்த குடும்பத்துடன் உறவாடி உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார்.2015 ஜனாதிபதித் தேர்தல் ஹிருணிகா எதிர்பார்த்த அந்த சந்தர்ப்பத்தைக் கொண்டு வந்தது.மஹிந்தவை விட்டு மைத்திரி பக்கம் தாவினார்.ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தனது திட்டத்தை வலுப்படுத்தினார்;வென்றார்.

தந்தையின் மரணத்துக்கு முன் நாமலை மனம் முடிக்கும் திட்டத்தில் ஹிருணிகா இருந்தபோதிலும்,மரணத்தின்பின் அந்த முடிவை மாற்றிக்கொண்டார்.நாமல் துமிந்தவுடன் நட்புக் கொண்டிருந்தமையும் இதற்கு காரணமாகும்.

பாரத கொல்லப்படாமல் இருந்திருந்தால் ஹிருணிகா-நாமல் திருமணம் நடந்திருக்கலாம்.தந்தையின் மரணம் ஹிருனிகாவுக்கு அரசியல் வாழ்வைக் கொடுத்துள்ளது.அதற்குப் பரிகாரமாக விடா முயற்சியுடன் இருந்து தந்தையின் கொலையாளிக்கு மரண தண்டனையும் வாங்கிக் கொடுத்துவிட்டார் ஹிருணிகா.

-MIM