ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ரவிக்கு கோல் எடுத்த ராஜித, பதிலளிக்காத ரவி

ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ரவிக்கு கோல் எடுத்த ராஜித, பதிலளிக்காத ரவி

ரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது  ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருந்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித  சேனாரட்ண அந்த சந்தர்ப்பத்திலேயே நிதி அமைச்சருக்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கும்  தொலைபேசியில் தொடர்பு கொள்ளவேண்டிய   நிலை  ஏற்பட்டது.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் வற் வரி அதிகரிப்பு  எப்போது அமுலுக்கு வரும் என கேள்வி சரமாரியாக  எழுப்பினர்.  

அதற்கு  பதிலளித்த அமைச்சர் சட்டமூலம்  வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் அமுலுக்கு வரும் எனக் கூறினார். எனினும்  சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே அமுலுக்கு வர முடியும் என   ஊடகவியலாளர்கள்   வாதிட்டனர்.

தனையடுத்து அமைச்ச் ராஜித சேனாரட்ன  உடனடியாக நிதி அமைச்சின் செயலாளருக்கு   தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார். எனினும்  அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர்  அமைச்சர் ராஜித்த நிதி அமைச்சருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்.  நிதி அமைச்சர் தொலைபேசிக்கு  பதிலளிக்கவில்லை. “

இதனையடுத்து  ஊடகவியலாளர்களை சற்றுப் பொறுமை காக்குமாறு கூறிய   ராஜித சேனாரட்ன ஏனைய கேள்விகளை எழுப்புமாறு   கூறினார்.  ஊடகவியலாளர்களின் ஏனைய  கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்துக்கொண்டிருந்த போது அருகிலிருந்து அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின்  தொலைபேசிக்கு நிதி அமைச்சர்  தொடர்பு கொண்டிருந்தார்.   நிதியமைச்சருடன்  தொலைபேசியில் உரையாடிய  அமைச்சர் கயந்த கருணாதிலக்க   அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டார். 

அதாவது வற் வரி அதிகரிப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே அமுலுக்கு வரும் என்று கூறி   அமைச்சர் கயந்த  சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார்.