அகதிப் பெண்களை சீரழிக்கும் ஐ.நா

அகதிப் பெண்களை சீரழிக்கும் ஐ.நா

ஐ.நா. அமைதிப் படையினர் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி பெண்களுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இது ஐ.நா. விதிமுறைகளை மீறிய செயல்” என ஐ.நா. செய்தி தொடர்பாளர் ஸ்டெபானே டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

‘அகதிகளுக்கு பணம், உணவு மற்றும் பரிசுகளை வழங்கி அதற்கு பதிலாக அவர்கள் சம்மதத்துடன் ஐ.நா., அமைதிப் படையினர் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இது ஐ.நா., விதிகளை மீறிய செயல், என்றார்.உள்நாட்டு போர் இனக் கலவரம் ஆகியவற்றால் சொந்த நாட்டிலேயே ஏராளமானோர் அகதிகளாகி முகாம்களில் வாழ்கின்றனர்.

அந்நாடுகளில் அமைதியை ஏற்படுத்த செல்லும் ஐ.நா., அமைதிப் படையினர் ‘பண்டமாற்று’ முறை போல் நிவாரணப் பொருட்களை வழங்கி அகதி பெண்களுடன் உடலுறவு கொள்வதாக பல முறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2005ல் காங்கோவில் நடந்த அட்டூழியம் குறித்து ஐ.நா., அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் ‘அகதி பெண்களுடன் உடலுறவு கொள்வது தங்களுக்கு உள்ள ‘காதல் உரிமை’ என அமைதிப் படை கருதுகின்றனர்’
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஹைதி தீவில் 200க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு அமைதிப் படையினர் நிவாரணப் பொருட்கள் கொடுத்து அவர்களை பாழ்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இதை ஐ.நா. ஆய்வுக் குழு உறுதி செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.