நாடாளுமன்றுக்குள் எதிர்பாராமல் நடந்த இரு விடயங்கள் – மஹிந்தவும், மைத்திரியும்…

நாடாளுமன்றுக்குள் எதிர்பாராமல் நடந்த இரு விடயங்கள் – மஹிந்தவும், மைத்திரியும்…

வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்று அனர்த்த முகாமைத்துவம், தேசிய கலந்துரையாடல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான குழுநிலை விவாதத்தில் எதிர்பாராத இருவர் உரை நிகழ்த்தியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுமே இன்று உரை நிகழ்த்தியுள்ளனர்.

இதற்கு முன்னர் மஹாவலி அபிவிருத்தி தொடர்பான குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் என்ற ரீதியில் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது ஏமாற்றத்திலேயே முடிவடைந்தது.

ஆனால் இன்று ஜனாதிபதி எதிர்பாரத நேரத்தில் நீண்டநேர உரையாற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலோ, அதன்மீதான வாக்கெடுப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்திலோ நாடாளுமன்றத்திற்கு மஹிந்த வரவும் இல்லை, குழுநிலை விவாதத்தில் கலந்து கொள்ளவும் இல்லை.

இந்த நிலையில் சீனாவுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இலங்கை வந்த முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வருகைத்தந்தது மட்டுமல்லாது உரை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

கியூபாவின் முன்னாள் தலைவர் பிடல் காஸ்ட்ரோவிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு சிறு உரையை நிகழ்த்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.