ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சாட்சி வழங்குவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு மேலதிகமாக முறைப்பாட்டின் 13 சாட்சியாளர்களுக்கும் அன்றைய தினம் நீதிமன்றத்தின் முன் ஆஜராகுமாறு உயர் நீதிமன்ற நீதிபதி குசலா வீரவர்தன உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அப்போதைய பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்திலான ஆவணங்களை ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தினார.

இதன்மூலம் இன மற்றும் மத ரீதியான மோதல்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.