அரசியல் முக்கியஸ்தர் மகனின் 1200CC அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல்

அரசியல் முக்கியஸ்தர் மகனின் 1200CC அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல்

கடந்த அரசாங்க பிரமுகரின் மகன் ஒருவர் சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த 4 மில்லியன் பெறுமதியான மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கெஸெல்வத்தை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாதாள உலக குழு நடவடிக்கையாளர்கள் பயன்படுத்தப்படும் ஒரு இரகசிய பதுங்கிடமான அப்துல் ஹமீட், தெரு ஸில்வர்ஸ்மித் லேன் பகுதியை கொழும்பு மத்திய பிரதேச சட்டம் அமலாக்க பிரிவு சோதனையிட்டுள்ளது.

அது பாதாள உலக குழுவினர் சந்திக்கும் இடம் எனவும், போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாகவும், பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த இடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் எதிர்பாராத விதமாக இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 1,200 சிசி இயந்திர திறன் கொண்ட கறுப்பு நிற டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் போது அந்த இடத்தில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர் தனக்கு பரிசாக கொடுத்துள்ளதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

குறித்த இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பயன்படுத்த சட்ட ரீதியான அனுமதி இல்லாத நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரது நண்பர்கள் சட்ட விரோதமான முறையில் இந்த மோட்டார் சைக்கிளை வீதியில் ஓட்டியுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் முன்னாள் பிரமுகர் மகனின் தலைமையில் சட்டவிரோத அலைவரிசைகள் மூலம் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் உள்ள மோட்டார் போக்குவரத்து சட்டங்களுக்கமைய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனே இது போன்ற திறன் கொண்ட வாகனங்களை நாட்டிற்குள் இறக்கமதி செய்ய முடியும், அத்துடன் இந்த மோட்டார் சைக்கிளில் ஓட்ட தடங்களில் மாத்திரமே ஓட்டமுடியும்.

இந்த மோட்டார் சைக்கிள் எப்படி கொண்டுவரப்பட்டதெனவும், குறித்த சந்தேக நபருக்கு எவ்வாறு கிடைத்ததென்பது தொடர்பில் தகவல் அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது இதற்கு முன்னர் எவ்வித குற்றச்சாட்டுகளும் பதிவாகவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளனர்.