இங்கிலாந்திடம் போராடித் தோற்று தொடரினைக் கைப்பற்றிய இந்தியா அணி.. [PHOTOS]

இங்கிலாந்திடம் போராடித் தோற்று தொடரினைக் கைப்பற்றிய இந்தியா அணி.. [PHOTOS]

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இங்கிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இந்திய அணி 9 விக்கட்டுக்களை இழந்து 316 ஓட்டங்களையே பெற்றது.

எவ்வாறாயினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றிருந்த இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.