சிறுபான்மை இனத்தை பாதிக்கும் தேர்தல் வியூகங்களுக்கு முன்மொழியப் போவதில்லை – ரிஷாத்

சிறுபான்மை இனத்தை பாதிக்கும் தேர்தல் வியூகங்களுக்கு முன்மொழியப் போவதில்லை – ரிஷாத்

பிர­தா­ன­மாக இரண்டு கட்­சி­களை மட்­டுமே மையப்­ப­டுத்­திய அர­சியல் கலா­சார நடைமுறையை ஏற்­ப­டுத்தும் தேர்தல் ­முறை முன்­மொ­ழிவை ஒரு­போதும் ஏற்­க­மாட்டேன் என பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தன்னிடம் உறுதியளித்­துள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரிவித்தார்.

அலரி மாளி­கையில் நேற்றுக் காலை இடம்பெற்ற சிறு­பான்மை இன, சிறு கட்சிகளுடனான சந்­திப்பு குறித்து கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

மேலும் கூறுகையில்; மாது­ளு­வாவே சோபித தேரரை நாங்கள் நேற்று முன்­தினம் சந்தித்தோம். அதன் ­போது 20வது தேர்தல் திருத்த வர்த்­த­மானி அறி­வித்­தலை உடனடியாக மீளப்­பெ­று­மாறும் அதன் அவசியத்தையும் சுட்டிக்காட்­டி­யி­ருந்தோம். அத்­தோடு ஜனா­தி­பதி தேர்­தலின் போது மைத்திரிபால சிறி­சே­ன­வுக்­காக ஆத­ர­வா­கவும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் செயற்­பட்ட கட்­சி­களை புறம் தள்ளும் வித­மா­கவே இந்த வர்த்­த­மானி அறிவித்தல் முறை அமைந்­துள்­ளது.

ஆகவே குறித்த தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான யோச­னை­யையும் வர்­த­­மானி அறிவித்­த­லையும் முற்­றாக நிரா­க­ரிக்­கின்றோம் என ஏகோ­பித்து தெரி­வித்தோம்.

அதற்­க­மை­வாக மாது­ளுவாவே சோபித தேரர் எமது நிலைப்­பா­டு­களை பூர­ண­மாக ஏற்றுக்கொண்டு எமது நிலைப்பாட்டை ஆதரித்த­வ­ராக அது தொடர்பில் அரசாங்கத்திற்கு உரிய அழுத்­தங்­களை பிரயோகிக்­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

இது எமக்கு கிடைத்த மாபெரும் வெற்­றி­யாகும். அதன் தொடர்ச்­சி­யாக இன்று (நேற்று) காலை பிர­த­மரை சந்­தித்து குறித்த 20 தொடர்பில் தெளிவாக கலந்­து­ரை­யா­டினோம். குறித்த சட்ட மூலம் தொடர்­பாக எமது நிலைப்பாட்டையும் ஆதங்­கங்­க­ளையும் செவி­ம­டுத்த பிர­தமர் எமது கோரிக்­கை­க­ளையும் ஏற்றுக் கொண்டார்.

அனைத்துக் கட்சி ஒன்­றி­ணைந்த அர­சியல் கலா­சா­ரத்தை முடி­வுக்கு கொண்­டு­வரும் எந்தவொரு யோச­னை­யையும் தானோ தனது தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சியோ ஏற்றுக் கொள்­ளப்­போ­வ­தில்­லை­யென அவர் திட்டவட்டமாக தெரி­வித்தார்.

இதனை நாம் வரவேற்பதுடன் தொடர்ச்சியாக இந்த விடயங்கள் தொடர்பில் பேசவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஒருபோதும் சிறுபான்மை இனத்தை பாதிக்கும் எந்தவொரு தேர்தல் முன்மொழிவுக்கும் நாம் துணை போகப் போவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.