அரிசியை சதொச ஊடாக உடனடியாக கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்…

அரிசியை சதொச ஊடாக உடனடியாக கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்…

நாட்டில் தற்போது நிலவியுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக 3,500 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அரிசியை சதொச ஊடாக உடனடியாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று(14) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வன ஜீவராசிகள் மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.