ஆடலை விட்டு நடிப்புக்குத் தாவும் அக்‌ஷரா கவுடா…

ஆடலை விட்டு நடிப்புக்குத் தாவும் அக்‌ஷரா கவுடா…

ஆடுவதை விட நடிப்பதையே தான் அதிகம் விரும்புவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த நடிகை அக்‌ஷரா கவுடா, விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் இந்தி படங்களில் நடனம் ஆடி இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு துணையாக வரும் பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தற்போது ‘மாயவன்’, ‘சங்கிலி புங்கிலி கதவ தெற’ படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது வில்லி, பொலிஸ் அதிகாரி வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

இது பற்றி கூறிய அக்‌ஷரா கவுடா….

“ ‘போகன்’ படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. இப்போதும் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பல படங்களில் ஆடி இருக்கிறேன். ஆடுவது எனக்கு பிடித்த வி‌ஷயம். என்றாலும், அது அந்த நேரத்தில் மட்டும் ரசிகர்களை சந்தோ‌ஷப்படுத்தும். அவ்வளவு தான். ஆனால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால் நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும். இனி ஆடுவதை குறைத்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்” என்றார்.