மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில்  GMOA முறைப்பாடு…

மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் GMOA முறைப்பாடு…

இலங்கையின் பிரபலமான மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ பொறுப்புக்களை நிறைவேற்றாது நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோர் செயற்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சபையிடம் முறைப்பாடு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர்.நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

நாட்டின் சட்டங்களை மதித்து மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுவதாக உறுதியளித்து அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்ட இவர்கள், அந்த வாக்குறுதிகளை மீறிச் செயற்பட்டுள்ளனர்.

நாட்டில் காணப்படும் சட்டங்கள் நியதிகளுக்கு அமைவாக செயற்பட்டு வரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

நாட்டின் உன்னதமான நிறுவனங்களின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அமைச்சர்களுக்கு இது பொருத்தமானதாக அமையாது.

அதிகாரத்தை ஏதேச்சையான முறையில் பயன்படுத்தி மக்களை அசௌகரியத்தை ஆழ்த்தி வருவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.