தேர்தல் முறையில் மற்றம் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம்

தேர்தல் முறையில் மற்றம் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம்

தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக இன்றும் (23) நாளையும் (24)  சபை பிற்போடும் சந்தர்ப்பத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதென  அவைத் தலைவர்- அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இவ்விவாதத்திற்கு எதிர்கட்சித் தலைவர் தனது எதிர்ப்பினை வெளியிட்ட போதிலும்,  பாராளுமன்றின் ஏனைய கட்சியினர் விவாதம் மேற்கொள்ளப்படவேண்டும் என பிரதி சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர் என அவைத் தலைவர் தெரிவித்தார்.

அதற்கமைய இன்றும் நாளையும் விவாதம் இடம்பெறும் என்றும்  பல்வேறு கட்சிகளின் கருத்துக்களை பாராளுமன்றமும் மக்களும் புரிந்துகொள்ள சந்தர்ப்பமாக இது அமையும் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.