IPL வீரர்கள் ஏலத்தில் அதி கூடிய விலையான 14.5 கோடிக்கு புனே அணிக்கு ஏலம் போன இங்கிலாந்து வீரர்…

IPL வீரர்கள் ஏலத்தில் அதி கூடிய விலையான 14.5 கோடிக்கு புனே அணிக்கு ஏலம் போன இங்கிலாந்து வீரர்…

பெங்களூரில் நடைபெற்று வரும் IPL வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை இந்திய பணத்தில் 14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி ஏலம் எடுத்தது. ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

10–வது IPL-20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5ம் திகதி முதல் மே 21ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 43 வெளிநாட்டினர் உள்பட 139 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் கழற்றி விடப்பட்டனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் IPL வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று(20) காலை தொடங்கியது.

இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. பவன் நெஹியை பெங்களூர் அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேத்யூசை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் துணை கெப்டனான பென் ஸ்டோக்சை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி இருந்தது. இறுதியில் பென் ஸ்டோக்சை புனே அணி ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. மதியம் வரையில் இதுவே அதிகபட்ச ஏலத்தொகையாக இருந்தது.

நிகோலஸ் பூரனை மும்பை இண்டியன்ஸ் 30 லட்சம் ரூபாய்க்கும், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.5 கோடிக்கும் ஏலம் எடுத்தன. இதேபோல் கோரி ஆண்டர்சனையும், அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியது. நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட்டை 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.